பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் கொலை: முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்தது லாகூர் கோர்ட்

257 0

லாகூர் சிறையில் மரண தண்டனை கைதியாக இருந்த சரப்ஜிங் சிங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை லாகூர் கோர்ட் விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் சிக்கியவர் இந்தியர் சரப்ஜித் சிங். இவர் லாகூர் சிறையில் மரண தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2013–ம் ஆண்டு, சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார். சரப்ஜித் சிங் கொலை தொடர்பாக அமீர் டம்பா, முடாசர் ஆகிய 2 பாகிஸ்தான் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, லாகூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. ஆனால் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு சாட்சியைக்கூட பாகிஸ்தான் அரசு ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து அமீர் டம்பா, முடாசர் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முகமது மொயின் கோக்கார் நேற்று தீர்ப்பு அளித்தார்.

Leave a comment