குவைத்தில் பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி மீண்டும் திறப்பு

2567 0

201606270529331268_Kuwait-mosque-hit-by-IS-suicide-bomb-reopens-as-fears-remain_SECVPFகுவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் பேர் திரண்டு, தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி அதி பயங்கர தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலின்போது 27 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 227 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடந்து ஓராண்டு ஆன நிலையில் அந்த மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

மசூதிக்குள் நீண்ட மர பலகைகளில் செதுக்கப்பட்ட திருக்குரான் வசனங்கள் மின்னுவதாகவும், தொழுகை நடத்த வருகிறவர்களுக்காக புதிய தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் அங்கு இன்னும் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடையே பதற்றம் நிலவுவதாகவும், அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன

Leave a comment