தனித்து செயற்படப்போகின்றோம்- சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்

5550 0

மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து  செயற்படப்போவதாக  மகிந்த அமரவீர  துமிந்த திசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர்

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமமந்திரி பதவியை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதேவேளை மகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம்  கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை நிருபிக்க தவறினால் மகிந்த ராஜபக்ச பதவிவிலகுவது சிறந்தது என தான்  தெரிவித்துள்ளதாகவும் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ச ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டார் என குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் முடிந்தால் ஜனாதிபதி அவரை பதவி விலக்கி காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.ராஜபக்ச பிரதமர் பதவியை கோரவில்லை ஜனாதிபதியே அவரை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்ததுடன் தான் பெரும்பான்மையை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் என சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்

Leave a comment