கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த திருட்டு கைத்தொலைபேசி யாழில் சம்பவம்

5672 31

kaithuயாழ்.கொக்குவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீடொன்றில் புகுந்து 21 ஆயிரம் ரூபாய் கைத்தொலைபேசி மற்றும் 46 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை களவாடிய இரண்டு சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிசாரினால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குறித்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற கைத்தொலைபேசியின் இமி இலக்கத்தினை வைத்தே இரு கொள்ளையர்களையும் பொலிஸார் யாழ்.நகரப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் இரு சந்தேக நபர்களையும் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தவெல தெரிவித்துள்ளார்.

Leave a comment