சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது

348 0

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இளைஞனை இன்று மாலை 2 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலே  இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த மைக்கல் பிரதீப்குமார் என்ற 26 வயதுடைய இளைஞனிடமிருந்தே  540 மில்லிகிராம் ஹொரோயினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment