வவுனியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்

12577 125

வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவினால் வீடு ஒன்றும் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  இரவு ஜந்து பேர்களை கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியதுடன் அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின் யன்னல் கதவுகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். மேலும் இத்தாக்குதலுக்கு இலக்காகிய தாயும் மகளும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதேவேளை குறித்த நபர்கள் முகத்தை மூடிமறைத்துகொண்டு வந்ததுடன் தலைக்கவசமும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெளுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்துக்கது.

Leave a comment