கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்

31834 77

துருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார்.

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி  தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது

Leave a comment