வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்

141 0

Yogeswaran-TNA-MPமட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாகரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரினால் பல இடங்களில் சிங்களக் குடியேற்றம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக வாகரையில் 178 சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

குறித்த பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் எதுவும் இருக்கவில்லையெனவும், இந்தப் பிரதேசத்திற்கு அருகில் வசித்தவன் என்ற முறையில் எனக்கு இந்தப் பிரதேசத்தை நன்கு தெரியுமெனவும், இங்கே சிங்கள மக்கள் வசிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

இதேவேளை புனானைப் பகுதியில், 1985ஆண்டளவில் 5 சிங்களக் குடும்பங்கள் வசித்துவந்ததாகவும் தற்போது அங்கே 29 குடும்பங்களைக் குடியேற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.