புளியங்குளத்தில் விபத்து! ஒருவர் பலி!

69 0

கூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

விபத்தில் யாழ் வடமாராட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றவரது கை துண்டாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published.