தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலமும், அதற்கான உறுதி பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றது-ரவீந்திர சமரவீர

373 0

தோட்ட தொழிலாளர்களின் ஊழிய சேமலாப நிதியை யானை விழுங்கி விட்டதாக தேர்தல் காலம் ஒன்றில் பொய்யான பிரச்சாரங்களை செய்து வாக்குகளை தம்வசம் படுத்திக் கொண்டார்கள். ஆனால் இத் தொழிலாளர்களின் இரண்டரை கோடி மில்லியன் ரூபாய் தொழில் அமைச்சான எனது அமைச்சின் கீழே இருக்கின்றது.

இத் தொகையை அதிகரித்து அடுத்து வரும் தேர்தலின் போது இதை மக்களுக்கு வழங்வோம் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகளை மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் அடிப்படையிலான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயர்வும் வகையில் நியாயமான சம்பள உயர்வு ஒன்றை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொடுக்கும்.

அரசாங்க தொழிலை எதிர்பார்க்கின்றவர்கள் அரச திணைக்களங்களில் வழங்கப்படுகின்ற சலுகைகள் தனியார் நிறுவனங்களிவ் கிடைக்க பெறுவதில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் காலத்தில் தனியார் நிறுவனங்களிலும் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகளும் தனியார் நிறுவனங்கள் ஊடாக வழங்க ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இலங்கையின் பூமியில் 7 பேர்ச் நிலத்தை தொழிலாளர்களுக்கு சொந்தமாக்க நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளையில் தெரிவித்ததையடுத்து நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின் ஊடாக இன்று தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலமும், அதற்கான உறுதி பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இது தவிர எதிர்வரும் காலத்தில் தோட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளும் வீடு மற்றும் காணி உரிமை பிரச்சினைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment