அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)

32 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா மதவாச்சியிலிருந்து ஆரம்பமானது.
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல என்றும், அது ஓர் அரசியல் விவகாரம் எனம் தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் 5ஆம் நாள் இன்றாகும்.
நடைபவனியின் முதலாம் நாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக முன்றலில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த நிலையில், கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுர சிறைச்சாலை வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய நேற்று வவுனியா மதவாச்சி பிரதேசத்தைச் சென்றடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி, இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டது.
குறித்த நடைபவனியில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புக்களைச் சேர்ந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பல தமிழ் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றுள்ள நிலையில், இன்றைய நடைபவனியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்து கட்சி அங்கத்தவர்கள் உட்பட யாழ் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனும் பங்கேற்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, தமது நடைபவனிக்கு வலுச்சேர்க்க முன்வருமாறு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

Posted by - February 26, 2017 0
எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது…

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெறும் – இலங்கை நம்பிக்கை

Posted by - November 13, 2016 0
அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே, அவர்…

தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை கண்டுபிடித்து விட்டதாக படைத்தரப்பு அறிவிப்பு!!

Posted by - April 16, 2018 0
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை…

சிறப்பு அதிரடிப்படையினரின் சூட்டில் இளைஞன் பலி!

Posted by - July 24, 2017 0
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.