மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம் பார்வையிட்டது!

1 0

தமிழ் நாடு ;மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னாருக்கு சென்று மன்னார் ;சதொச வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடு அகழ்வு பணியை பார்வையிட்டனர்.

சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் வளாகத்திற்கு சென்றனர்.

குறித்த குழுவில் சட்டத்தரணிகள், தடவியல் நிபுணர், பேராசிரியர்கள் உள்ளடங்களாக இரு பெண்கள் உற்பட 7 பேர் அடங்குகின்றனர். அகழ்வு பணிகள் இடம் பெறுகின்ற வளாகத்திற்குள் சென்ற இந்தக் குழுவினர் அகழ்வு பணிகளை தலைமை தாங்கி மேற்கொண்டு வரும் விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வை சந்தித்து உரையாடினர்.

இதன் போது அகழ்வுப்பகுதி வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக தமிழ் நாடு  மக்கள் கண்காணிப்பகம் பொது அமைப்பின் பிரதிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ விளக்கமளித்தார்.

Related Post

பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

Posted by - June 7, 2018 0
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று…

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலை… (காணொளி)

Posted by - April 21, 2017 0
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலையை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.;. முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின்…

சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்! விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

Posted by - February 5, 2019 0
2019 பெப்ரவெரி 4ந் திகதி சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில்…

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017 0
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட இருக்கிறது.  இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - February 18, 2019 0
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019  அன்று கிளிநொச்சியில் நடத்துவதற்கு  திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்…

Leave a comment

Your email address will not be published.