அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு

215 0

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷானுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான உபாலி பத்மசிறி மற்றும் யானைகளை பதிவு செய்யும் ஆவணங்களுக்கு பொறுப்பாக இருந்த பிரியங்கா சஞ்சீவனி ஆகியோரும் அந்த எழுவரில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி யானைத் தந்தங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உட்பட எழு பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 24 குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment