யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!

2 0

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.

அங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர். நேற்றிரவு பனிக்கன்குளம் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலை மீண்டும் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாங்குளத்தைத் தாண்டி தமது பயணம் தொடரும் என அறிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தம்முடன் பல்கலைக்கழக பழைய மாணவர்களும் இணைந்துள்ளதாகவும் அரசியல் வேறுபாடின்றி அனைவரது ஒத்துளைப்பையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post

கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற யாழ். கூட்டத்தில் கருத்து மோதல் -அமைச்சர் தலையிட்டு சமரசம் செய்தார்-

Posted by - August 22, 2016 0
கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடக்கு, தெற்கு கடற்றொழிலாளர்களிடையே காரசார விவாதம் இடம்பெற்று குழப்ப நிலையொன்று உருவானது. எனினும் அமைச்சர்…

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

Posted by - July 19, 2016 0
யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது  மெளனம்…

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விடுதியின்…

முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

Posted by - September 26, 2016 0
‘தினத்தந்தி’ சார்பாக நாளை நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும், சிறந்த நூலுக்கான பரிசை முனைவர் தாயம்மாள்…

அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்!

Posted by - August 15, 2018 0
இனவாதத் தீ இதுதானோ ! ஆடிக் கலவரமாய் ஆனியில் நூலகமாய் ஆண்டாண்டு தோறும் அவர்களுக்கு அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்

Leave a comment

Your email address will not be published.