எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

 

அதன்படி ஒக்டேய்ன் 92 ரக பெற்றோலின் விலை 155 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 172 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 141 ரூபாவாகவும். ஓடோ டீசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.