தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சுமார் 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்து ஸ்தலத்திலேயே பலியானச் சம்பவம் மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 53 வயதுடைய சின்னையா தெய்வானை என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதபரிசோதனைக்காக சடலம் காட்மோர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

