9 வருடங்களில் 29309 கைதிகளுக்கு விடுதலை

221 0

ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை 9 வருடங்களில் 29309 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப் போதே அமைச்சர் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லையென்றும், கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளாரென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் இரண்டு பெண்கள் கொலையுடன் ​தொடர்புடைய அமைச்சர் ஒருவரின் மனைவி என்றும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment