நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக காதலியை பிரிந்த இளைஞர் கோர்ட்டில் வழக்கு

251 0

நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக இளைஞரின் திருமணம் கைகூடாமல் சென்றது, இதனையடுத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து,  இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.  இருவரையும் இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இதுவரையில் அதில் முன்னேற்றம் காணப்படவில்லை. இருப்பினும் நிரவ் மோடி தன்னுடைய போலிதனத்தை விடவில்லை. தொடர்ந்து போலி வைர நகைகளை விற்பனை செய்கிறார் என தெரியவந்துள்ளது.
நிரவ் மோடி ஏற்கனவே போலியான வைரங்களை விற்பனை செய்கிறார் என குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தது. இப்போது அதற்கு வலு சேர்க்கும் விதமாக மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக இளைஞரின் திருமணம் கைகூடாமல் சென்றுள்ளது, இதனையடுத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வங்கி மோசடியில் சிக்கிய நிரவ் மோடியை கனடா நாட்டு  இளைஞர் பால் அல்போன்சோ கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து தனது திருமண நிச்சயதார்த்திற்காக ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3.2 காரட் எடையுள்ள ஒரு வைர மோதிரத்தை நிரவ் மோடியிடம் இருந்து வாங்கியுள்ளார்.
பின்னர் அந்த மோதிரத்தால் ஈர்க்கப்பட்ட அல்போன்சோவின் காதலி தனக்கு இதேபோல் இன்னொரு மோதிரம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். இதனால் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2.5 காரட் எடை கொண்ட மற்றொரு வைர மோதிரத்தை நிரவ் மோடியிடம் இருந்து அல்போன்சோ வாங்கியுள்ளார்.  இந்த 2 வைர மோதிரங்களும் போலியானவை என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இதனால் அல்போன்சோவிடம் இருந்து காதலி பிரிந்து விட்டார். நிரவ் மோடியிடம் வாங்கிய போலி வைர மோதிரங்களால் அவருடைய திருமணம் கைகூடாமல் போய்விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அல்போன்சோ, தன்னை ஏமாற்றியதற்காக ரூ.29 கோடி நஷ்ட ஈடாக நிரவ் மோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரி லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

Leave a comment