மைத்திரிக்கும், ரணிலுக்கும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு

234 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை வௌியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

இந்த மனுவில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களானஇ ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

வௌிநாடு சென்றுள்ள காரணத்தால் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாது என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது செயலாளர்கள் ஊடாக எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பிரிஸ்இ ஜனாதிபதி மற்றும் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராகாத போதும் வேறு சாட்சிகளை கொண்டு வழக்கை ஆரம்பிக்க தயார் என்று கூறினார்.

பிரதிவாதியின் சட்டத்தரணி மற்றொரு வழக்கில் ஆஜராகியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான கனிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.

எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி விகும் களுஆரச்சி வழக்கை எதிர்வரும் ஜனவரி 22 மற்றும் 23ம் திகதிகளில் விசாரிக்க உத்தரவிட்டதுடன்இ அன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல இருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி தற்காலிகமாக அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கும் உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனஇ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகஇ போலி ஆவணங்களை வெளியிட்டமையால்இ இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாகஇ திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment