மாகாண சபை தேர்தலுக்கு பழைய முறையே உகந்தது-இராதாகிருஸ்ணன்

234 0

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜராமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் “நமக்கு நாமே விடியல் மீட்பு திட்டம்” எனும் தொனிப்பொருளில் சுய தொழில் செய்பவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜராம்இ பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர் ஜெயசந்திரன் உட்பட மலையக மக்கள் முண்ணனியின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்இ இந்தியா இலங்கையுடன் 1987 ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்திற்கு அமைவாக இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபை உருவாக்கப்பட்டதனால் தான் இன்று நுவரெலியா மாவட்டத்தில் 17 உறுப்பினர்கள் உருவாகக்கூடிய நிலை உள்ளது.

அதில் கிட்டதட்ட 12 உறுப்பினர்கள் தமிழ் உறுப்பினர்கள் வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. தோட்டப்பகுதியிலே இருக்கின்ற காரணங்களினால் தோட்டப்பகுதியனை அபிவிருத்தி செய்வதற்காகவும்இ பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்காகவுமே சுகாதார துறையினை மேம்படுத்துவதற்காகவும் இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது.

ஆகவே மத்திய மாகாண சபையின் காலம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் வடக்குஇ வடமேல் ஆகிய மாகாண சபைகளின் காலமும் முடிவடையும்.

மலையக மக்களின் கோரிக்கைக்கு அமைய பழைய முறைப்படியே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். பிரதேச சபைகளின் தேர்தல் முறைமை புதிய முறையில் நடந்ததனால் நாங்கள் கஷ்டப்டப்பட்டோம். இதனால் உருப்படியான சபையை அமைக்க முடியவில்லை.

பணம் இருந்தால் சபையை அமைக்கும் நிலையே காணப்பட்டன. அங்கத்தவரை விலைக்கு வாங்கலாம்இ அரசாங்கத்தின் நோக்கம் பணம் அதிமாக செலவு செய்யக்கூடாது. மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கக்கூடாது. நேர்மையான முறையில் போக வேண்டும் என்பது தான்.

நடந்து முடிந்த உள்ளூராட்சியில் இதற்கு மாறாக நடைபெற்றதாகவும்இ எனவே மாகாண சபை தேர்தல் முறைமை பழைய முறையிலேயே தேர்தல் நடத்தபட வேண்டும் என்றார்.

Leave a comment