நாலக சில்வா எவ்வேளையும் கைதாகலாம்

322 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்படலாம் என அரச பகுப்பாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொலை முயற்சி தொடர்பான  தொலைபேசி உரையாடல் குறித்து இடம்பெற்ற ஆய்வுகளின் போது பதிவாகியுள்ளது நாலக டி சில்வாவின் குரலே என்பது உறுதியாகியுள்ளது என பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள பொலிஸ் வட்டாரங்களும் இதன் காரணமாக அவர் எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளன.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் தனது அறிக்கையை ஏற்கனவே சிஐடியினருக்கு அனுப்பி வைத்துள்ளது. சிஐடியினர் இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத விசாரணை பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளையும் சிஐடியினர் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்

இரு துப்பாக்கிகளும் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என ஆராயுமாறு சிஐடியினர் கோரியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் டீஐடியினரிற்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கான வேண்டுகோள்கள் போன்றவற்றிற்கும் கொலை சதி முயற்சிக்கும் இடையில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave a comment