தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே, செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாலக சில்வாவின் கல்வித் தகுதிகள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணைகள் குறித்து இதன்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்,உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் தெரிவித்த முறைபாடுகளுக்கு அமையவே, நாலக சில்வாவின் கல்வித் தகுதிகள் குறித்து விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில், எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டவில்லையென, செயலாளர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா பெற்றுக்கொண்டுள்ள பட்டம் குறித்து தகவல்கள் கோரப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

