பாப் பாடகர் பிரின்ஸ் கிதார் ரூ.1 கோடிக்கு ஏலம்

4983 20

201606261401358585_Colts-owner-Jim-Irsay-buys-Princes-guitar-for-rs-1-crore_SECVPFஅமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் பிரின்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் மின்னை சோமேகாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவரது யெல்லோ கிளவுடு கிதார் கலிபோர்னியாவில் உள்ள பிவெரலி ஹில்ஸ் என்ற இடத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. அதை இண்டியானாபொலிஸ் கோல்ட்ஸ் என்ற அமெரிக்க கால்பந்து அணியின் உரிமையாளர் ஜிம் இர்சே ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

இவர் பிரபல இசை கலைஞர்கள் பயன்படுத்திய இசைகருவிகளை வாங்கி சேகரித்து வருகிறார். பாப் டைலான், ஜான் லென்னான் மற்றும் ஜெர்ரி கார்சியா ஆகியோரின் இசைக்கருவிகளையும் வாங்கி இருக்கிறார்.

Leave a comment