நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல் விதானகே மற்றும் வெயாங்காடை புனித மெரி மகா வித்தியாலயத்தின் குருகலசூரிய சனுப திமத் பெரேரா ஆகிய இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் பெற்றுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
அதேவேளை வவுனியா, நெலுக்குளம் சிவப்புரம் ஆரம்ப பாடசாலை பாடசாலையின் மாணவன் பாலகுமார் ஹரிதிகான்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

