இதற்கமைய, 350 மில்லிலீற்றர் முதல் 499 மில்லி லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை 26 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 500 மில்லி லீற்றர் முதல் 749 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தலொன்றின் விலை 35 ரூபாவாகவும், 750 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தலொன்றின் விலை 40 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு லீற்றர் முதல் 1.499 லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தலின் விலை 50 ரூபாவாகவும், 1.500 லீற்றர் முதல் 4.999 லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை 70 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 லீற்றர் முதல் 6.999 லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தலின் விலை 150 ரூபாவாகவும், 7 லீற்றர் கொள்ளளவுகொண்ட போத்தலின் விலை 170 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகார சபையினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.