ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (28) பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து பெறப்பட்ட குரல் பதிவு தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் 3 வாரங்களில் வழங்கப்படும் என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ. வெலிஅங்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமார் அரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் குரல் பதிவு வழங்கியுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

