சட்டவிரோத நாணயத்தாள்களுடன் மூவர் கைது

320 0

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் சட்ட விரேத நாணயத்தாள்களுடன் 3 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதியைச் சேர்ந்த 22, 24, 52 வயது உடையவர்கள்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கி பஸ்ஸில் வருகை தந்து தம்புள்ளையில்  கார் ஒன்றினை வாடகைக்கு  பெற்றுக்கொண்டு திருகோணமலை பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காரை சோதனையிட்டபோது 5000 ரூபாய் பணம் 469 சட்டவிரோத நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியிலேயே தம்பலகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் பண்டார தலைமையிலான குழுவினர் சோதனையிட்டதாகவும்  தெரியவருகின்றது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave a comment