நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரை ஐந்து மணித்தியாலங்கள் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
நெல்லியடி பொலிஸாருக்கு மேலதிகமாக வேறு பொலிஸ் நிலையங்களில் இருந்தும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மூன்று கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவரும், மது போதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற மூவர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.

