புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு(காணொளி)

45 0

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்த, தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நிகழ்வு, புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில்இ, புதுக்குடியிருப்பு சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது, வணிக நிலையங்களை மூடி அலங்கரிக்கப்பட்ட பந்தலில், திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

வணிக நிலைய உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.