மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு(காணொளி)

2 0

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், காலை 10.48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும், மத தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்திலும் தியாக தீபம் திலிபனின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது சர்வமதத்தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக அனந்தி பொலிஸில் முறைப்பாடு

Posted by - July 20, 2018 0
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட மாகாண பெண் அமைச்சர்…

மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)

Posted by - December 1, 2018 0
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை, தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா…

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்துஓரணியில் திரள வேண்டும்.

Posted by - October 23, 2018 0
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம்…

விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - April 13, 2018 0
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக…

தமிழர்களுக்கு உதவ நோர்வேயும் ஐ.நாவும் உடன்படிக்கை

Posted by - July 19, 2016 0
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும் மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன. இன்று இதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்…

Leave a comment

Your email address will not be published.