எட்கா உடன்படிக்கை வெகு விரைவில்

328 0

v-krishnamoorthi-3-e1367403642443எட்கா எனப்படும் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சிறந்த ஆடைத்தொழிற்சாலைகள் உள்ளன.

அது தொடர்பில் சிறந்த தேர்ச்சியும் தொழில்நுட்பமும் இலங்கையிடம் உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானரீதியான முன்னேற்றங்களை கொண்டு குறித்த உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தி கொள்ளப்படவுள்ளதாக கிருஸ்ணமூர்த்தி குறிப்பிட்hர்.

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தென்கொரியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை போன்று இந்தியாவும் இலங்கைக்கு பாரிய வழங்குனர் சேவையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி 1999ஆம் ஆண்டில் 35.3 மில்லியன் டொலர்களாக இருந்தநிலையில் 2015 இல் 643 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக வடிவேல் கிருஸ்ணமூர்;த்தி குறிப்பிட்டுள்ளார்.