ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை

1611 0

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் ஜெசிகா தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் வந்து கலந்துகொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது.

Leave a comment