பாலியல் புகார் தொடர்பான வழக்கு – அமெரிக்க காமெடி நடிகருக்கு 10 ஆண்டு சிறை

10544 115
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்தவர் பில் காஸ்பி. காமெடி நடிகரான 81 வயதான இவர் ஹாலிவுட் படங்களிலும், டி.வி.யில் காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2004, ஜனவரியில் டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் ஆண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்கம் கொள்ளவைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்படிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் இவர் குற்றவாளி என நிரூபணமானது
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபணமானதால் பில் காஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓ நீல் உத்தரவிட்டார்.

Leave a comment