மஹிந்த அரசாங்கம் கடன்களை நன்மையான திட்டத்திற்காக பயன்படுத்தவில்லை-ரணில்

254 0

கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தகத்திற்கான கடன்கள் நன்மையான திட்டத்திற்காக பயன்படுத்தாதன் காரணமாக அதன் பெறுபேறுகளை இப்பொழுது காணக்கூடியதாக இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சூரியவௌ – வெதிவேவ என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க என்ற எழுச்சிக் கிராமத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் டொலருக்கு நிகராக ரூபா நான்கு மாத காலப் பகுதியில் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்த முறையை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் மதிப்பு குறைவடைந்ததனால் மக்களின் வாழ்க்கை நிலை சீர்குலைந்திருப்பதாக எதிர்த்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அதில் உண்மை என்றால் பொதுமக்களுக்கு இலவசமாக காணிகளை வழங்கி வீடுகளை அமைப்பதற்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் நிதியுதவிகளை சமகால நல்லாட்சி அரசாங்கம் வழங்கப்படுவது எவ்வாறு என்பதைத் தாம் இவ்வாறானவர்களிடம் கேட்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நிழல், உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள 127 ஆவது மாதிரிக் கிராமம் இதுவாகும். இங்கு 70 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமத்தை அமைப்பதற்காக 6 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment