கூட்டு எதிர்க் கட்சியில் கோட்டாவைக் கொலை செய்ய சதி செய்யவில்லை- வெல்கம

270 0

ஜனாதிபதியையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய கூட்டு எதிர்க் கட்சியினர் சதி செய்யவில்லையெனவும், அவ்வாறு செய்யக்கூடிய யாரும் கூட்டு எதிர்க் கட்சியில் இல்லையெனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  தெரிவித்துள்ளார்.

நான் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ராஜபக்ஷ ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அது மஹிந்த ராஜபக்ஷவாகவே இருக்கவேண்டும். நான் அவரைத் தான் விரும்புகின்றேன். ஏனென்றால் நாட்டு மக்களும் அவரையே விரும்புகின்றார்கள்.

களுத்துறை மாவட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment