கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான்-அர்ஜுன ரணதுங்க

25 0

நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான் எனவும், இதற்கு தயாசிறி எனும் நபர் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தயாசிறிதான் கிரிக்கெட் விளையாட்டுக்குள் சூதுக் காரர்களை நுழைத்தவர். இன்று தயாசிறி புகிபாலவின் கதையைத்தான் கூறுகின்றார். இதனால், தயாசிறிக்கு எதிர்காலத்தில் மனிதர்கள் புகிசிறி என்று அழைக்க ஆரம்பிப்பார்கள். அதனை தடுக்க முடியாது போகும்.

இன்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.