நான் தலைமறைவாக இல்லை; என்னை பிடிக்க 2 தனிப்படை அமைத்திருப்பது தெரியாது: திருக்கடையூரில் எச்.ராஜா தகவல்

429 0

“நான் தலைமறைவாக இல்லை, என்னைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப் பட்டிருப்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

தனது உறவினர் இல்ல விழாவையொட்டி, நாகை மாவட் டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில், 89 சதவீதம் உள்ள இந்துக்கள் தங்களுடைய வழி பாட்டு முறைக்காக போராட வேண் டிய அவலநிலை தமிழகத்தில் உள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,646 கோயில்கள் இருப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது. அதில், 10 ஆயிரம் கோயில்கள் இப்போது இல்லை. அந்தக் கோயில்கள் அனைத்தும் பூட்டப் பட்டு புதர்மண்டிக் கிடக்கின்றன. அங்கு இருந்த சாமி சிலைகள் திருடு போய்விட்டன.

கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் அருங் காட்சியகங்களிலும், செல்வந்தர் களின் வீடுகளிலும் உள்ளன. இப் படி சிலைகள் திருடு போவதற்கு உடந்தையாக இருந்த, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி ஊழல் நிறைந்த துறை யாக இந்து சமய அறநிலையத் துறை இருக்கிறது. இதை பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதால் என் மீது கோபமும், எரிச்சலும் அடைந்துள்ள ஒருசில ஊழல் அதிகாரிகள், அர்ச்சகர்கள், அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு காவல் நிலையங்களில் என் மீது புகார் கொடுத்துள்ளனர்.

என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப் பேன். இது ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். என் மீது போடப் பட்டுள்ள வழக்குகளால், அறநிலை யத் துறையில் நடந்துள்ள ஊழல் மக்களுக்கு தெரியவரும். நான் தலைமறைவாக இல்லை. என்னைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படை அமைத்து இருப்பது எனக்குத் தெரியாது. வழக்கு இருப்பதால் இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

Leave a comment