பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுலை மாதம் பாராளுமன்றில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்தி இருந்தது.
அதன் பரிந்துரைக்கு அமைய இருவருக்கும் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

