இரத்தினபுரியில் கடத்தி கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்!

313 0

இரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார். இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர். இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களே இந்த கொலையை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக, காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . சந்தேகநபர்கள் குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment