பெங்களூரு சிறையில் சசிகலாவை நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்துப் பேசினார். அவர், எதற்காக சசிகலாவை சந்தித்தார் என்று நம்மிடம் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரின் உடல் நலம் குறித்து பல தகவல்கள் வெளியாகிவந்தன. இந்த நிலையில் நடிகர் கருணாஸ்எம்.எல்.ஏ, நேற்று சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் அவருடன் கருணாஸ் பேசியுள்ளார்.
சிறையில் சசிகலா எப்படியிருக்கிறார்?
“சசிகலா மேடம் நலமாக இருக்கிறார். உற்சாகத்துடன் பேசினார்”
எதற்காக சசிகலாவை சந்தித்தீர்கள்?
“அவரைச் சந்தித்து நீண்ட நாள்களாகிவிட்டது. எம்.நடராசன் இறந்தபோது அவரைச் சந்தித்தேன். அதன்பிறகு அவரைப் பார்க்கவில்லை. இதனால் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துப் பேசினேன்”
சசிகலா உடல் நலம் குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மையா?
“அப்படியெல்லாம் இல்லை. அவர், பூரண நலத்துடன் இருக்கிறார். அவரின் உடல் நலம் குறித்து தவறான தகவல்கள் வெளியாகிவருகின்றன”
சசிகலாவுடன் அரசியல் ரீதியாக பேசினீர்களா?
“அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழக அரசியல் குறித்து அவர் அப்டேட்டில்தான் இருக்கிறார்”
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து எதாவது பேசினீர்களா?
“ இல்லை. பொதுவான விஷயங்களைப் பேசினோம். இடைத்தேர்தல் குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை”

