தேசிய அரசாங்கத்தில்  இருந்து வெளியேறிய பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சாட்டும் 16 உறுப்பினர்களும்  கடந்த அரசாங்கத்தில் பல குற்றச்சாட்டுக்களுடன்  தொடர்புப்பட்டவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,

அரசாங்கத்தின்  ஒரு சரிவினை கண்டதன் பின்னர் தமது  அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தில் இருந்து வெளியெறிய 16 உறுப்பினர்கள் இன்று பொதுஜன பெரமுனவுடன்  இணையாமல் அரசியல் அநாதைகளாக செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

 

ஐக்கிய தேசிய கட்சியிக் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.