நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை – திகாம்பரம்

307 0

நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை,  தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்ட அவர்,

தோட்ட சமுதாயத்திரனுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்கவும், அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கவும் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை கவனம் செலுத்துவதுடன்  இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் மூலமாக மலையக மக்களின் நீண்ட கால கனவொன்று  நிறைவேறுகிறது.

நேற்றைய தினம் மலையக மக்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு தினமாகும். புதிய கிராமங்களை அபிவிருத்திச் செய்வதற்கான ஒரு அதிகாரசபைக்கான முன்மொழிவு  இன்று சட்ட அந்தஸ்து பெற இருக்கின்றது. இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் மூலமாக மலையக மக்களின் நீண்டகால கனவொன்று  நிறைவேறுகிறது.

எனினும்  தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சிற்கான பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த அமைச்சினால் உருவாக்கப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டு வருவதை நான் அவதானித்து வருகிறேன்.

Leave a comment