முச்சக்கர வண்டியின் கட்டணம் அதிகரிக்கிறது

247 0

எரிபொருட்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் முச்சக்கர வண்டி பயணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 60 ரூபா அறவிடப்பட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.டி. அல்விஸ் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றமையால் முச்சக்கர வண்டிகளின் பயணக்கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்காக இதுவரை அறவிடப்பட்டுவந்து 50 ரூபா புதிய திருத்தமாக 60 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

அத்துடன் இரண்டாவது கிலாமீற்றருக்காக 42 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீற்றருக்காகவும் 40 ரூபா அறவிடப்படும். என்றாலும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் விரும்பினால் இரண்டாவது கிலோ மீற்றருக்காக 40 ரூபா அறவிட முடியும்.

Leave a comment