யாழில் வாள் முனையில் பெருமளவு பணம் கொள்ளை

10589 333

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில்  பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது வாளோடு உள்நுழைந்த கொள்ளையர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment