இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் – தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி

8775 0

தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார்.

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது:

தமி­ழீழ மண்­ணில் எனக்­குப் பல அனு­ப­வங்­கள் உள்­ளன. நான் இங்கு பல தட­வை­கள் வந்­துள்­ளேன். நாம் ஒரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் உள்­ளோம். கடந்த காலத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளோம்.

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது. தமி­ழர்க் கலை என்­பது உல­கின் மூத்த குடி­க­ளின் கலை­யா­கும். நாங்­கள் பல­வற்றை இழந்து விட்­டோம். அது­மட்­டு­மல்­லாது இருப்­ப­தை­யும் இழந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

தமி­ழர் கலையை மீட்­டெ­டுக்­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றோம். தமிழ் நாட்­டில் தமிழ் அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் தமி­ழீ­ழத்­திலே தமிழ் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக முத­லில் தமி­ழீழ மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூற­வேண்­டும்.உல­கெங்­கும் தமிழ் பர­வி­யுள்­ளது.

அதற்கு மூல கார­ணம் ஈழத்­துத் தமி­ழர்­களே. ஏனெ­னில் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் இடப்­பெ­யர்­வு­க­ளைச் சந்­தித்து உல­கின் பல நாடு­க­ளில் வாழ்­கின்­ற­னர். இத­னால் உல­கம் முழு­வ­தும் தமிழ் பர­வி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது தமி­ழ­ரின் கலை, கலா­சா­ர­மும் பர­வி­யுள்­ளது. இதன் விளை­வாக தமி­ழ­ரின் வாழ்­வி­யல் அர­சி­யல் அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

நாம் இன்று தோற்­றி­ருக்­க­லாம் பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­தி­ருக்­க­லாம். இவை அனைத்­தும் நாம் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கான பாட­மா­கவே நாங்­கள் பார்க்க வேண்­டும். நான் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிளி­நொச்சி மாவ­ட­டத்­துக்கு வந்­தி­ருந்­தேன். அங்கு எத்­த­னையோ நிகழ்­வு­கள் உணர்வு பூர்­வ­மா­க­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. நான் இப்­போ­தும் அதே உணர்­வி­னைப் பார்க்­கின்­றேன் -– என்­றார்.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­ம­னற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம் சயந்­தன், கஜ­தீ­பன் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­உள்­ளிட்ட பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

https://youtu.be/07E7bh5qlo8

Leave a comment