`அய்யாவுக்கு நிகர் யார்?’- பெரியார் குறித்து நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்

11215 0

சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

 பெரியார்
தந்தை பெரியாருக்கு இன்று 140-வது பிறந்தநாள். திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தங்கள் வாழ்த்துகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தந்தை பெரியார், அம்பேத்கர், காரல்மாக்ஸ் சிலைகளுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போன்று சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் கட்சியின் முன்னணியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 பெரியார்

 

பெரியார் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த மு.க.ஸ்டாலின், ‘பாமரருக்காகவே வாழ்நாளெல்லாம் வாதாடிய வழக்கறிஞர். சமூகத்தின் நோய்களை எல்லாம் அடையாளம் கண்டு குணப்படுத்திய மருத்துவர். தமிழர்களை தடி கொண்டு எழுப்பிய கொள்கைச் சூரியன். சரி எது, தவறு எது என்று காட்டிய கலங்கரை விளக்கு. அய்யாவுக்கு நிகர் யார்? வாழ்க தந்தை பெரியார்!’ என்று பதிவிட்டிருந்தார்.

`மூட நம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவை வளர்த்தெடுத்த பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளில் அவருக்கு வீர வணக்கம். அவரது சிந்தனைகள் செயலாக்கம் பெறவும், நோக்கங்கள் நிறைவேறவும் உழைக்க உறுதி ஏற்போம்!’ என்று ராமதாஸ் பதிவிட்டிருந்தார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்துக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை.

Leave a comment