கலஹா வைத்தியசாலையை மீளத்திறக்க 1 மாத கால அவகாசம்

283 0

தற்போது மூடப்பட்டுள்ள கலஹா பிரதேச வைத்தியசாலையை மீளத்திறப்பதற்கு மேலும் 1 மாத காலம் ஏற்படும் என மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் கட்டிடம் மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த வைத்தியசாலை காலவரையற்று மூடுவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

வைத்தியசாலை மூடப்பட்ட காரணத்தால் அப்பகுதி மக்கள் அசௌகரியங்களுக்காக முகங்கொடுப்பதாக தெரிவித்து நேற்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சாந்தனி சமரசிங்கவிடம் விசாரித்த போது, வைத்தியசாலையை மீள திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேலும் ஒரு மாத காலத்திற்குள் வைத்தியசாலையை மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment