பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி ஒப்புதலின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

