இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஆகியோருக்கிடையில் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இந்திய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்துக்கான உதவிகளை பல்வேறு தேவைகளின் பொருட்டு உதவுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாகாண செயலகங்களுக்கான தொழில் நிருவாகப் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களும் பேசப்பட்டன.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஆளுநரின் புதல்வி டொக்டர். டில்சானி போகொல்லாகம போன்றோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

