நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது வரவேற்கத்தக்க விடயம்-அஜித் பி.பெரேரா

8701 2,248

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது வரவேற்கத்தக்க விடயம் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா, இப் பிரேரணை தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடை கலந்துரையாடலின் பின்னரே அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது பொது மக்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடியதாக அமையும். ஆகவே இவ் விடயத்தில் காணப்படுகின்ற உண்மை தன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன் 20 ஆவது திருத்தம் மீது முறைபாடுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்களும் திருத்தத்துக்கு சாதகமாக அமைய வேண்டும். அதன் பின்னரே பாராளுமன்ற விவாதத்தை முழுமையாக மேற்கொள்ள முடியும்.

எனவே இந்த எதர்ப்புக்களின் மத்தியில் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை பெறுவதென்பது சவாலாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

There are 2,248 comments